அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, September 7, 2007

இறைவா இறைவா அவளிடம் என்னை விதைத்ததுவிடு

இறைவா இறைவா என்னை கருணையின் கருவியாக்கு,
இறைவா இறைவா என்னை பொறுமையின் இமயமாக்கு,
இறைவா இறைவா என்னை அமைதியின் சின்னமாக்கு,
இறைவா இறைவா என்னை வன்முறையின் எதிரியாக்கு,
எங்கே மனிதன் பாசம் இல்லாமல் தவிக்கிரானோ
அங்கே என் நேசம் தொடர ஆணையிடு.
எங்கே அழுகை குரல் அதிகம் கேட்கிறதோ
அங்கே என்னை தாலாட்டும் தாயாக்கு.
எங்கே இருளில் உலகம் தடுமாறுகிறதோ
அங்கே என்னை ஒளி தரும் கருவியாக்கு.
எங்கே உயிருக்கு மதிபில்லையொ
அங்கே என் கருணை படர்ந்திட வழிகாட்டு.
எங்கே போர்கள் வெடிக்கிறதோ
அங்கே என் பொறுமையை பறைசாற்று.
எங்கே என்னவள் வசிக்கின்றாலோ
அங்கு நிரந்தரமாய் என்னை காவலனாக்கு.
தாக்கம்
அன்னை தெரெஸா
அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home