அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

உன்னை பற்றி

என்னவளே என் காதல் சொல்ல சில வார்த்தைகள்
இதோ இங்கு சேகரித்து வைத்திருக்கிறேன் .

உன் அழகை சொல்ல சில வார்த்தைகள் ,
வானம், நிலா, மயில், வெட்கம், அருவி, மழை, மாலை, பூ,புல்வெளி.

உன் குணத்தை சொல்ல சில வார்த்தைகள்
பூ வாசம், கோவில், பக்தி, கருணை, பாசம், பண்பு, பொறுமை.

உன் வாழ்வை சொல்ல சில வார்த்தைகள்
பிரம்பன், கம்பன், புள்ளி மான், இதயம், கருவரை,

இன்னும் உன்னை பற்றி சொல்ல தமிழில் மூன்று லட்சம் வார்த்தைகள்
ஆனால் என் காதலின் ஆழம் சொல்ல ஒரு வார்த்தை மட்டும்தான் உண்டு
அது உன் பெயர்தான் ,

அனுஷாதாசன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home