அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Saturday, September 8, 2007

பெண் - ஒரு மதம்

உன் மதம் என்ன , பெண்மையா?
இத்தனை மதம் பிறந்து மனிதனை அழித்துத்த்து போதாதா !
இன்னும் எத்தனை உயிரை நீ குடிக்க போகிறாய்.
தேநீர் சூட்டை கூட தாங்காத உன்னால் -
எப்படி என்னுள் ரத்தகொதிப்பை ஏற்படுத்த முடியும்.
வியக்கிறேன் பெண்மையின் மதத்தில் இத்தனை வன்முறையா?மென்மையானவள் என்று நம்பிததானே
உன்னிடம் என் இதயத்தை பரிசளித்தேன்,
நீயேன் உன் மதத்திற்காக என்னை பலி கொடுத்தாய்.
உன்னிடம் நான் காதல் வரம் கூட கேட்கவில்லை
பின்பு ஏன் என் உண்மை நட்பை சூரையாடினாய்
என் அனைத்து சொந்தமும் என்னை வெறுக்க செய்தாய் ,
உண்மையில் பெண்ணே நான் கொடுத்த இதயத்தை ஒரு முறை திறந்து பார், அதில் காதல் இருக்காது ஒரு நண்பனின் உண்மை கண்ணியம் தெரியும்.
நீ பெண் மதத்தில் பிறந்ததால்தானே இந்த நட்பு தொடர மறுக்கிறாய்.
உன் மதத்தை நான் வணங்குகிறேன்.

அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home