இறந்துவிடடி நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்
என்னவளே, என் அனுவே, உனக்கு எப்படியடி சொல்லுவேன்,
இடப்பக்கம் துடிக்கும் இதயத்தின் அதிர்ச்சி வலப்பக்கம் வலிக்குதடி,
கண்களை மூடி உன்னை நினைத்தால், என் தலையை பாறையில்
முட்டியதை போலே ஒரு மங்கிய பார்வையில் என் வலி மறப்பேன்,
இருந்தும் ஏனோ என் தூக்கம் மறப்பேன்.
இறப்பு என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது
அந்த அசையா உடல், ஒரு வேளை அந்த உடலுக்கு உணர்ச்சி மட்டும் இருந்தால், அது அந்த உடலை இயக்க எப்படி தவிக்கும், கற்பனை செய்து பாரடி, அப்படித்தான் துடிக்கிறேன் சொல்ல தெரியாமல், என் காதலை.
நாம் முழுதும் வெறுக்கும் ஒருவன் நம்மை அனைவர் முன்னிலையில்
அவமதித்து, மகிழ்ந்து, வாய்விட்டு சிரித்து, அதனை நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போனால் , தலை சிறிது தாழ்த்தி அவமானம் அதை மறைத்து,
அமைதியாக பற்களை மட்டும் கடித்து, நிலையில்லாத மனம் கொண்டும் அந்த இடத்தை விட்டு செல்ல முடியாமல் துடிப்போமே,
அது போல்தானடி நீ மாற்றானை மணக்க போவது தெரிந்தும் கோழையாக உயிர்விட முடியாமல் உன் திருமண அழைப்பிதழ் கண்டு நான் துடிப்பது.
சொல்ல தெரியவில்லையடி - நான் எப்படி தமிழில் சொல்லுவேன்
இறந்துவிடடி நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்,
மாற்றானோடு செல்லாதடி நான் குமுறி அழுதுவிடுவேன்.
அன்புடன்
அனுஷாதாசன்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home