அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, October 12, 2007

தனிமை

என் தனிமை என்னவென்று தெரியுமா?

காலையில் கண்விழிக்க என்னை எழுப்ப யாரும் இல்லை ‍ நானாக நேரம் கடந்து எழுந்து வெறுபோடு வேறுவழி இன்றி சுடு நீர் விலவ யாரும் இல்லாத்தால் அந்த குளிரில் நான் புரிவேன் குளிர்ந்த நீர் குளியல் ‍ தெரியுமா உனக்கு எத்தனை கொடுமை அது என்று.

என் துணிகள் அதனை துவைத்து வைக்கவும் யாரும் கிடையாது ‍ தனியே கசங்கிய துணிகள் அதனுள் சிறந்ததை எடுத்து உடுத்தி திரிவேன் அதனை கேட்க கூட யாரும் இல்லை.

காலையில் கண்விழித்தவுடனே தேனீர் அதனை உதடு சுட உள்ளிக்க ஆசை ஏனோ அதனை தர யாரும் எனக்கு இல்லை.

பணிக்கு செல்லும் முன் சிறிது காலை உணவு உட்கொள்லும் பேராசை ஏனோ எனக்கு பரிமார யாரும் இல்லை.

வீட்டை விட்டு வெளியே செல்லும் என்னை பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எண்ணி விடை கொடுக்க எனக்கு யாரும் இல்லை.

என் வீட்டு பூட்டு மட்டும் சொல்லும் என்னிடம் விரைவாக வா , இல்லை என்றால் என்னை உடைத்து உனக்கு துணையாக உன்னோடு வாழும் உயிரற்ற அந்த சில பொருட்களையும் திருடிவிடுவார்கள் என்று!!!!

தெருவில் நான் நடந்து வரும் போது என் தலைமுடி கலைந்திருக்கும் பல நாட்களுக்கு முன்னால் துவைத்த துணி அதிலே மெல்லிய வியர்வை வாசம் , உள்வாங்கிய சிறுத்த என் கண்கள் எதையோ தேடும், உலகில் எல்லாவற்றையும் தொலைத்ததை போன்ற என் முகம் , என் உருவம் கண்டவர் எல்லோருக்கும் சோகம் சூளும் , இருப்பினும் என் கண்ணீர் துளி துடைக்க எனக்கு யாரும் இல்லை.

வேலை அது என‌க்கு அவ‌மான‌ சோலை !!
இங்ஙும் என்னை கேட்க‌ யாரும் இல்லை, தெரிந்தே இங்கு நான் ப‌ல‌ பிழை செய்கிறேன் , யார‌வ‌து அத‌ற்காக‌ என்னிட‌ம் பேச‌ மாட்டார்க‌ளா என்று !!!!! பாவிக‌ள் என்னை எப்பொழுதும் ம‌ன்னித்து விடுவார்க‌ள். என்னை திட்ட‌ கூட‌ இங்கு யாரும் இல்லை.

மாலை க‌ட‌ற்க‌ரையோர‌ம் ந‌டைப‌ய‌ண‌ம் இங்கு என் கை கோர்த்து ந‌டை ப‌ழ‌க‌ யாரும் இல்லை , த‌னியே அந்த க‌ட‌ல் அலைக‌ள் ம‌ட்டும் கேளி செய்யும் என்னை, ம‌டி சாய்ந்து‌ அழ‌ கூட‌ என் தாய் என்னுட‌ன் இல்லை.

என் ம‌ன‌ம் விட்டு சில‌ உண்மை சொல்ல‌ என‌க்கு ந‌ண்ப‌ர்க‌ள் என்று சொல்ல‌ இங்கே ஒருவ‌ன் கூட‌ இல்லை. வெறுப்பின் விழும்பில் என் வ‌யிற்றுப்ப‌சி தெருவோர‌ம் இய‌ங்கும் அந்த சொர்க‌ம் த‌ள்ளு வ‌ண்டி சிற்றுண்டி க‌டை !! ஆஹா எத்த‌னை ஆன‌ந்த‌ம் அந்த‌ க‌டைக்கார‌ அக்கா பாச‌த்தோடு என‌க்கு ப‌ரிமாரிய புளித்து போன‌ தோசை ரெண்டுட‌ன் அவ‌ள் பேசிய‌ இர‌ண்டு வார்த்தை "துட்ட‌ கொடுயா" !!!!
இத‌னை கூட‌ என்னிட‌ம் பேச‌ யாரும் இல்லை.
என் வீட்டு பூட்டு என‌க்காக‌ காத்திருக்கும் அத‌னை காண‌ நான் விரைந்து செல்வேன், நான் தாம‌த‌மாக‌ வ‌ந்த‌தால் அது கூட‌ என்னிட‌ம் பேசாம‌ல் நின்ற‌து.

இப்ப‌டி ஒரு வாழ்க்கை இங்கு தேவையா என்று நான் ம‌ட்டும் தின‌ம் தின‌ம் என்னிட‌ம் கேட்குக்கொள்வேன்.

தெரியுமா உன‌க்கு த‌னிமை என்றால் என்ன‌வென்று , உன்னோடு நான் வாழும் க‌ன‌வோடு இங்கு நான் வ‌ந்தேன் பெண்ணே !!!

இன்றும் உன்னோடுதான் வாழ்ந்து வ‌ருகிறேன் த‌ன்ன‌ந்த‌னியே !!!
அன்புட‌ன்.
அனுஷாதாச‌ன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home