என்னை பற்றி குட்டி கதை சொல்லவா
உனக்கு குட்டி கதை சொல்லவா!
அழகிய காலை நேரம் அடர்ந்த காடு என்னை சுற்றி , ஒருவரும் இல்லாத தனிமை இதுவரை நான் கண்டிடாதா அமைதி.
அழகிய காலை நேரம் அடர்ந்த காடு என்னை சுற்றி , ஒருவரும் இல்லாத தனிமை இதுவரை நான் கண்டிடாதா அமைதி.
தூரத்தில் ஒரு குருவி குடும்பத்தில் காலை உரையாடல் - தாய் குருவி தன் குட்டி குருவியை எழுப்பி, இரை தேட சொல்லும் சத்தம் - என் காதில் தெளிவாக விழுகிறது. குட்டி குருவி தாயிடம் கொஞ்சி சிறுது தூங்குகிறது, தாய் குருவி சுறுசுறுப்பின் அவசியத்தை குட்டி குருவிக்கு சொல்ல குட்டி குருவியும் இரை தேட புறப்படுகிறது.
அந்த அழகிய கூட்டின் அருகே ஒரு குயில் குரு இல்லாமல் சாதகம் செய்கிற சத்தமும் கேட்கிறது. மூங்கில்களும், வானுயர்ந்த மரங்களும், பச்சை புல்வெளியும், காலை காற்றுடன் நீராடி மகிழ்கின்ற தருணம் என் மேனியேல்லாம் சிலிர்த்து போகும் சிறு குளிர் நடுக்கம்.
என் மூச்சின் உஸ்னததை என் உள்ளங்கைகள் தேடி போக கால்களோ அந்த அழகிய நீரோடையை நோக்கி நடந்து செல்ல. என்னுள் எத்தனை ஆனந்தம், நீரோடையை நெருங்க நெருங்க வயிற்றுக்குள் ஒரு இனம் புரியாத கிரக்கம். நெருப்பு சுட்டுவிடுமோ என்ற பயம் போல , தெளிங்க நீரோடை நீர் என்னை சிலிர்க்க செய்யுமோ என்ற பயம்.
அத்தனை மெதுவாக நீரோடை தண்ணீரை வருடி பார்க்கும் என் நுனி விரல்கள் - கொடுத்து வைத்வை நீதான் என்று என் மற்ற உறுப்புக்கள் பொறாமையில் மெய் சிலிர்க்க, தூறல் போடும் தெளிந்த வானம்.
தூக்க கலக்கத்தில் சூரியன் சோம்பலில் எட்டிப்பார்க்க் , தோன்றும் இரண்டு வானவில், ஒன்று நீல வானில் மற்றொன்று என்னுள் வானில். கண்கள் இரண்டையும் அகல திறந்து அந்த அற்புத சூழலில் வானம் பார்க்கசடசடவென தூரல் என் கண்ணில் - விழித்து பார்த்தேன் என் இல்லம்.
என் தாய் என்னை எழுப்ப செய்யும் அர்ச்சனை கேட்க முடியவில்லை, அடுப்பில் பால் குக்கர் எழுப்பும் விசில் சத்தம் என் காதுகளை காயம் செய்ய,
திறந்த ஜன்னல் வழியே உடைந்த சாக்கடையின் குமட்டும் துர்நாற்றம்.மின் தடையினால் அரை முழுக்க உஸ்ணம் தாங்காமல் என்மேல் வியர்வை துர்நாற்றம்.

நேற்று பெய்த மழையினால் வீட்டில் தண்ணீர் தேக்கம், சிறிய துணியைக்கொண்டு தந்தை அதை பிழிந்து வெளிதிறும் காட்சி. கூரை ஓட்டை வழியே சுள்ளென்று சூரியன் என்னை வெறுபெற்ற , திங்கட்கிழமை அலுவலகம் என்னை அழைபதை காண்கிறேன் என் கைப்பேசியில் பத்துக்கும் மேற்பட்ட செய்தி , என் மேலாளரிடம் இருந்து.
பதினொரு மணிக்கு அடிமை சந்திப்பு (க்லைன்த் மீட்டிங்) உடனே வரவும். காரணம் தவமிருந்து நான் ஆனா கணினி பொறியாழன் வேலை. வெறுப்புடன் இரண்டு குவளை தண்ணீரில் காக்கை குளியல், வீட்டு உணவு வேண்டாம் என்று தாயிடம் அறைகூவல் காரணம் மதியம் வெள்ளையன் பணத்தில் மதிய பிச்சை ( டீம் அவுட்டிங் ).
உலகம் போற்றும் மறை தமிழனாம் நான் முழுக்கை ஊடுப்பில் பெருமையாக வியர்வை வழிந்தோட நிறுவன வாகனத்திற்காக நிற்கிறேன். அய்யோ கைபேசி? அது இல்லை என்றால் இன்று எப்படி! திரும்பி ஓடு வீட்டை நோக்கி எடுத்துக்கொள் மறந்தேனே நான் கைப்பேசியில் மின் நிரப்ப, சரி நிறுவனம் அதற்கும் ஏற்பாடு செய்திருக்கும், மூச்சிரைக்க ஓடு நிறுவன வாகனம் ஏற. வாகனத்திற்குள் யாரிடமும் முகம் கொடுத்து பேசாதே , அதில் எவன் வேண்டுமென்றாலும் உனக்கு கிடைக்கும் எழும்பிற்கு போட்டியாக வந்துவிடுவான்.

அமைதியாக கைப்பேசியை எடுத்து உன்னை மதிக்காத பெண்ணிடம் எதை வேண்டுமென்றாலும் பேசு. நிறுவன சிறை வந்துவிட்டது இந்த சிறையில் அனைவரும் கைதிகள் காவலர்கள் வேறு நாட்டில் !. தொழில்நுட்பம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
காலை பதினொரு மணி நேரம் வந்து விட்டது தொலைபேசியில் காவலர் காலில் விழ ! வழக்கம் போல் என் சக ஊழிய நண்பணை கைகாட்டி தப்பித்து கொண்டேன் ( பெறுமூச்சி). எப்படி நேரம் போனாதென்றே தெரியவில்லை, எந்த வேலையும் நான் செய்ததாக நினைவும் இல்லை , கைப்பேசியில் எண்களை பார்த்து இலவசமாக நண்பர்களிடம் ஊர் கதை பேசியத்தை தவிர , நேரமோ இரவு பத்து மணி, வீட்டுக்கு கிளம்ப எழுகிறேன் மறுபடியும் கைபேசி, மேலாளர் கலிங்.... (அழகிய திமிருதன் இருவிழிப்புயல் என்னை தாக்குதே ஓ ஓ - ரிங் டொன்.) எடுத்தவுடன் "ஒரு முக்கியமான க்லைன்த் நெஞ்ச நடுராத்திரி ரெண்டு மணி (ஐ.எஸ்.டீ) க்கு நக்..... ( மன்னிக்கவும் அவ்வளவு காண்டு) நீ எனக்கு பதிலா நா........ போ!
இதுக்கு உனக்கு இரண்டு ரொட்டி துண்டு இலவசம் (அதிஸநல் அலவந்ஸ்)" . என் மனத்தில் அவ்வளவு சந்தோசம், இரண்டு ரொட்டி துண்டு கண்ணுல தெரியுது நிம்மதியான தூக்கம் , குடும்பத்தோட உணவு, குழந்தைக்காக கொஞ்ச நேரம் இதுவா முக்கியம், ஒண்ணு இல்ல ரெண்டு ரொட்டி துண்டு, அதுவும் இலவசம்(இழவசம்).
ஒரு நாள் திரும்ப மேல் கண்ட கனவு நிச்சியம் வரும் என்று மனசுக்குள்ள ஒரு ஓரமா தோணுது .அட ச்ச நேரம் இரவு (அதிகாலை) ரெண்டு மணி கால நக்.......... நேரம் வந்தாச்சி ரெண்டு ரொட்டி துண்டு - ஐயா இத வச்சி இன்னும் மூணு மணி நேரம் கைபேசி பில்ல கட்டலாம், இன்னும் பத்து பெண்ணொட கடலை போடலாம். மரத்தமிழன் நான் கண்டிப்பாக வெளிநாடு சென்று என் இந்த திறமையை உலகிற்கு பாறைசாற்றுவேன்.

பாண்டிய மன்னன் (தெரியாதவர்கள் சங்க வரலாறு(ஹிஸ்தரி) படிக்கவும்) நாம் புகழ் கூற இமயம் சென்று கொடி நட்டான், இளைஞர் நாம் இந்த நாட்டு மன்னர் அல்லவா ! நான் புகழை உலகெங்கும் சென்று கோடிகாக (பணம்) மாற்றான் காலில் சமர்ப்பிப்போம். யாராவது நம்மை அடையாளம் கண்டால் உடனே நாம் வீட்டு வறுமையை கை காட்டுவோம் , முடியாமல் போனால் நாம் இந்திய திரு நாட்டின் மீது பழி போட்டு வேறு நாடு சென்று தெரு நாய்கள் போல வாழ்வோம்.
ஐயயையீயோ கனவு கண்டுகிட்டே ரெண்டு ரொட்டி துண்ட விட்டுதேனே , நேரம் மூணு மணி கால நக்.... மறந்துட்டேனே போச்சி நாளைக்கும் யாரையாவது கை காட்டி தப்பிக்க வேண்டியதுதான் , இல்லானா எப்படி வெளிநாடு போறது பிச்சை எடுக்கரது , சரி இப்ப போய் ஓசி டீ குடிச்சிட்டூ வீட்டுக்கு போவோம்.
மீதி கனவ அடுத்த வாரம் தூங்கும்போது தொடாருவோம். இல்லைன்னா நாளைக்கு எப்படி நிர்வாக பேருந்துல ஓசியில வர்றது.
காலந்காத்தால ஏழு மணிக்கே வந்து நீக்கும் சனியன்.
அன்புடன்
அனுஷாதாசன்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home