அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, September 21, 2007

வெற்றி வாகை

எனக்கு வாழ்க்கையில் வெற்றி வாகை சூட ஆசை
கண்களில் வெறி கொண்டு , கண்டேன் எண்ணில் உறங்க விழிகள் ரெண்டு.
அஞ்சாதா நடைப்பபயணம் , முட்கள் கொண்ட கடும் பாதை
எத்தனை எத்தனை தடை , அதை தகர்த்தெரியும் இந்த தனி மனித படை.
அஞ்சியதில்லை எப்பொழுதும் முன்னே தோன்றியதெல்லாம் வெற்றியின் சின்னம். கலங்கியதில்லை எப்பொழுதும்
துரோகம் கண்டு என் இதயம். நொடிக்கு ஒரு முறை துடிக்கும் பொழுதும்
சொல்லும் ஜெயம் என்னும் தாரக மந்திரம்.
உழைத்து உழைத்து தாகம் தோன்றும் தமிழ் ஊற்று மட்டும் என் தாகம் தீர்க்கும்.
எத்தனை காயம் என்னுள் கொண்டும் தோன்றாமல் போன என் மன இறுக்கம்.

இத்தனை இருந்தும் என்ன பயன் வழியில் நான் கொண்ட ஓய்வில்
தூக்கம் கொண்டதால் அழகிய சிறு கனவு தோன்றும் .
அத்தனை அழகிய கனவில் மூழ்கிடாமல் என் இதயம் சொல்லும்
முன்னே செல்ல லட்சிய பாதை இருக்க, தேவை இல்லை இந்த பருவ பயணம்.


எத்தனையோ அழகிய கனவுகள் தவிர்த்து லட்சியம் மட்டும் குடியிருக்கும் -
என் இதயத்தில் நீ எப்படி நுழைந்தாய் ? -என்று நினைவுகள் வியக்கும்.
எங்கே சென்றது என் லட்சிய வேட்கை என்ற குழப்பம் என்ணில்.
எத்தனை நடுக்கம் இதனை சொல்ல ,
பயத்தில் என் உதடுகள் - உன் பெயரை சொல்ல.
காதல் இல்லை இது என்பதை எனக்கு நான் எப்படி சொல்ல,
உன்னை தேடி தேடி கனவுலகில் என் நாட்கள் செல்ல.
பெண்மை இல்லாமல் இவ்வுலகை நான் முதலில் வெல்ல
உன்னிடம் நான் அடிமையானேன் நான் இனி என்ன சொல்ல.

எனக்கு வாழ்க்கையில் வெற்றி வாகை சூட ஆசை கண்களில் வெறி கொண்டு , கண்டேன் எண்ணில் உறங்க விழிகள் ரெண்டு.
அஞ்சாதா நடைப்பபயணம் , முட்கள் கொண்ட கடும் பாதை
எத்தனை எத்தனை தடை , அதை தகர்த்தெரியும் இந்த தனி மனித படை.
அஞ்சியதில்லை எப்பொழுதும் முன்னே தோன்றியதெல்லாம் வெற்றியின் சின்னம். கலங்கியதில்லை எப்பொழுதும்
துரோகம் கண்டு என் இதயம். நொடிக்கு ஒரு முறை துடிக்கும் பொழுதும்
சொல்லும் ஜெயம் என்னும் தாரக மந்திரம். உழைத்து உழைத்து தாகம் தோன்றும் தமிழ் ஊற்று மட்டும் என் தாகம் தீர்க்கும்.
எத்தனை காயம் என்னுள் கொண்டும் தோன்றாமல் போன என் மன இறுக்கம்.

இன்று இது கனவாகி போனது - கனவுகள் மெய்யாக இதயம் துடிக்குது.
லட்சிய பயணம் கொண்டோரே பெண்ணின் மேல் காதல் வேண்டாம்.
கொண்டால் !
வெற்றியிலும் தோல்வி காண்பாய் தோல்வியிலும் தோல்வி காண்பாய்.
பெண்கள் மீது குற்றம் இல்லை அவர்கள் அப்பாவிகள் , நீ வெற்றி பெற்றால் பெண்கள்தான் காரணம் ,
தோல்வி கொண்டால் நீ மட்டுமே காரணம்.

எத்தனை பெரிய லட்சியம் எனக்கு - என்னையும் புலம்ப வைத்தவளே !
இப்போதாவது ஒரு முறை கூறு நீ என்னை காதலிக்கவில்லை என்று.
இம்முறையும் மௌனம் சாதித்தால் நான் சென்றிடுவேன் - திரும்பி
நான் என் லட்சிய பயணத்தை நோக்கி !

காதல் செய்வதாக நீ சொன்னால் காணிக்கையாக என் வெற்றிக்கு பின்னால் நீ!
எது வேண்டும் என்னிடம் சொல்லு

அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home