அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Thursday, September 20, 2007

இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்

இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் சிரிப்பினை காண எத்தனை நாள் தவம் இருந்தேன் ,
உன் கொஞ்சும் பார்வை என் மீது பட எத்தனை முறை சிறகடித்தேன்.

இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்
உன் ரத்தம் வீதியில் வழிந்து ஓடியதைக்கண்டு - அதை அணை போட்டு
தடுக்க தெரியாமல் மூடன் ஆகிபோணேன் .

முதல் முதலில் உன் முகம் அருகில் காண
எத்தனை கோவிலில் வாரம் கேட்டேன்,
இப்படியா உன் கண்கள் மூடி உன் முகம் அருகில் காண்பேன் -
இப்படியாஉன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.

உன் உதடுகள் ஏதோ என்னிடம் சொல்ல இன்றும் தயங்குதிடி
இம்முறையும் நீ சொல்லாமல் போனால் -
உனக்கு நேர்ந்த விபத்தால் என் உயிர் போகுமடி.

நீயும் இல்லை என்று சொன்னால் - ஏன்துயர் .
சொல்லியார் மடியில் தலை சாய்ந்து அழுவேன்டி.
என் கைகள் நடுங்குதாடி, என் இதயம் பதறுத்தடி,


இப்படியா உன்னை காண இத்தனை நாள் காத்திருந்தேன்.
இப்படி உன்னை கண்டதற்கு காணாமளே இறந்திருப்பேன்.

அன்புடன்
அனுஷாதாசன்.

1 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home