அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Friday, October 12, 2007

இனி போர்க‌ள் ம‌ட்டும் நிலைத்திருக்க‌ட்டும்

நதிக்கரையோரம் மெல்லிய புற்கள் படர்ந்த காலை நேரம்

நீரோடை செய்யும் போரில் சிந்தும் சாரல் துளிகள்

அந்த‌ புற்களின் மீது படிந்த ரத்ததுளிபோல் சூரிய ஓளி வந்து சுத்தம் செய்ய

காத்திருக்க, போரில் மடிந்து விழும் வீரர்கள் போல, ஓலமிட்டு கீழே

விழும் அருவிகளின் அலரல், இப்படி ஒரு போர் களத்திலும் - ஓடை

அதன் கரையோரம் தேங்கிய தண்ணீர் அத‌னோடு பூத்திருக்கம்
வண்ண வண்ண மலர்கள் !!!

நீண்டு வளர்ந்த மூங்கில் மரம் அதன் கோபம் தீர கத்திச்சண்டையிடும்

தன் கூட்டத்தோடு, யார் வானோடு விளையாடுவது என்று.

வானத்தோடு உரசிக்கொண்டு வாழும் அந்த மலைகளுக்கு இடையே

இந்த போர் நாடகம் ‍, இப்படி ஒரு போர் களம் இருக்குமேயானால்‍;

இனி இப்பூவுலகில் போர்கள் மட்டுமே நிலைத்திருக்கட்டும்..

அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home