கொய்யா பழம்
நிரத்தில் நீ அழகில்லை ஆனால் ஏனடி உன் மேல் எனக்கு ஆசை!
ஏன் என்று தெரியவில்லை நாக்கில் எச்சில் ஊருதடி;
உன் ருசி படவேண்டும் என்றே நான் பசி கொண்டு காத்திருப்பேன்.
காய்கள் கணியாமல் உண்ண முடியாது
உன்னை மட்டும்தானடி காயாகக்கூட உண்ண துடிக்குதடி என் இதயம்.
உன் மேல் மிளகாய் உப்பை தூவினால் நீ
என் நாக்கின் அடியில் நீர் ஊற்றாகிராய் - உன்னை பரித்தவுடனே
கடித்து தின்றால் நீயோ என் கண்களிலே அருவியாகிராய்
ஏன் அருமை (அம்)மாங்கனிக்கு பிறகு உன்னிடம்
மட்டுமே நான் காணுகிறேன் இத்த்னை அழகிய
ஒரு கிரக்கம், உண்டபின் கவளை மறந்த உறக்கம்.
நீ கனிந்த பின்னும் எனடி என் உள்ளம் கவரும் நிரமானாய்
திரண்டு வளர்ந்து ஏனடி பிடிவாதம் கொண்ட சேயானாய்
மஞ்சல் நிரம் போர்தி உள்ளே மெல்லிய சிகப்பு கணிமம்
அதில் எத்தனை விதை முததுக்களை பதித்து
உன்னை உண்ணுவோரைபரவசப்படுத்தினாய்.
உண்போருக்கு நீயோ பல சக்தியிடுகிராய்,
இரும்பு மனம் கொண்டோருக்கும் நீ இரும்பு சத்து எற்றுகிறாய்
பால் மனம் கொண்டோருக்கும் நீ தூய பாடம் புகட்டுகிறாய்.
கல்நெஞ்சம் கொண்டோரும் உன்னை கண்டால் நீர் கசிந்து நின்றார்.
மற்ற பழத்தை போல் இல்லையடி நீ !
மற்ற பழத்தை போல் இல்லையடி நீ !
ஆண்டு முழுவதுமே நீ பூக்கிறாய் உன்னை
என் தோட்டத்தில்பாதுகாக்க நாளெல்லாம் காவல் கொண்டேன்.
இத்தனையும் உள்ளதடி நீ அன்று உண்ட கொய்யா பழம் அதில்.
இத்தனையும் உள்ளதடி நீ அன்று உண்ட கொய்யா பழம் அதில்.
நீயெனடி அந்த அனிலிடம் மாட்டிக்கொண்டாய்
அதற்கு உன் ருசி மட்டும்தான் தெரியும் உன் அருமை புரியாது.
உன் தாய் உனக்கு கொய்யா பழம் தருகிறாள் நீ அதை தின்று
அனிலிடம் மாட்டிக்கொண்டாய். வருந்துகிறேன் நான் வளர்த கொய்யா மாற்றான் தோட்டத்து அனிலிடம் அழியபோவதை.
அன்றே அனில் மிகவும் மோசமானது
ஒரு சிறிய கல்லை போட்டு அனுமனின் சேவை
அனைத்தையும் மறைத்தது ராமணிடம் இருந்து.
இந்த கலிகாலத்தில் இந்த ராமன் செய்த சேவையை
இந்த கலிகாலத்தில் இந்த ராமன் செய்த சேவையை
அந்த அனில் எமாற்றி பிடுஙகியது என் கொய்யா பழம் உன்னை.
இனி பாதுகாக்க நீ இல்லை , நீ வாழ்ந்து போன மரம் உண்டு
இனி பாதுகாக்க நீ இல்லை , நீ வாழ்ந்து போன மரம் உண்டு
அதன் அடியில் மீண்டும் என் கொய்யா நீ பூப்பாய் என்று காத்திருப்பேன்.
பட்ட மரம் பூக்காது - எனக்கு தெரியும் ,
மீண்டும் வருவாயா என் கொய்யா பழமே!
அன்புடன்
அனுஷாதாசன்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home