அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Thursday, November 22, 2007

உதய நாள் நல்வாழ்த்துக்கள்.

நிலா அது விழித்திருக்கும் சாமத்தில், முழுமதி தோன்றும் தருணம் இது ‍பெளர்னமி இன்று, காலை முதல் விரதம் இருந்து, சுத்தம் அதனை பறிமாறி.ஆயக்கலை அறுபத்து மூன்று அதில் கவிதை எனும் கலை எடுத்து ‍ தமிழ் எனும் பூமி அதில் கற்பனை எனும் நடவு நட்டு. அதில் புதுமை எனும் தண்ணீர் விட்டு,
ஆங்கிலம் எனும் களை எடுத்து, காத்து, காத்திருந்து; கருத்து எனும் அரிவாளால் அறுவடை செய்த கவிதை அதில் உணர்ச்சி கொண்டு நாற்றடித்து சிதறும்மணி மணியாய் சொற்மணிகள் .
அத்தனையும் பதமாய் வேகவைத்து சுக்கு திப்பிளி கிராம்பு சீரகம் சேர்த்துமனமாக சமைத்து காலை சுரியனிடம் படையளிட காத்திருக்கும் தமிழர் போல‌,

முத்தமிழ் கொண்டு நீ சமைத்த தமிழ் குருவி லேகியம் அதை உனக்கு உன் உதய (பிறந்த) நாளில் பரிசளிக்க எத்தனை இன்பம் என்னிடம்.
உதய நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
அனுஷாதாசன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home