அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Monday, April 27, 2009

என்னை ஏமாற்றிய அவள் இறக்க வேண்டியவள்தான்

என்னை ஏமாற்றிய அவள் இறக்க வேண்டியவள்தான், நான் எதற்க்கு அவள் இறுது ஊர்வளத்திற்க்கு வரவேண்டும். நான் பிறந்த ஜாதியை காட்டி என்னை விட்டு பிரிந்து சென்றாள், அவளுக்காக நான் எதற்க்கு கவலை பட வேண்டும், நீ போய் உன் வேலையை பாருடா என்று என் காதலி இறந்த செய்தி சொன்ன என் பள்ளி நண்பனிடம் தொலைபேசியில் சொல்லிவிட்டு என் அருகே இருந்த குவளையில் இருந்த தண்ணீரை பருகினேன், என் இதயத்துடிப்பின் சப்தம் என் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது, கண்களால் எதை பார்த்தாலும் மங்கிய ஒரு காட்சியை காட்டுகிறது.


அந்த காட்சி என்ன என்று கண்களை கசக்கி பார்க்கிறேன், அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி முன் நான் நின்று கொண்டு காரணம் புரியாமல் சிரித்து கொண்டு இருந்த காட்சி. அதுதான் நான் கடைசியாக எனக்காக சிரித்த நாள், அன்றுதான் அவளை முதல்முதலாக பார்த்தேன்.


அந்த காட்சி மறைந்து அடுத்த காட்சி, ஒரு வருடம் முன்பு சென்னை கடற்கரையோரம் தனியாக புலம்பிக்கொண்டு இருந்தேன், என்னை கடல் அலைகள் உள்ளே வா வா என்று அழைத்துக்கொண்டு இருந்தது. உப்புத்தண்ணீரில் நனைவது அவளுக்கு பிடிக்காது, அதனால் உன்னைக்கொண்டு நான் தற்கொலை செய்ய மாட்டேன் என்றேன். அலைகள் என்னை பார்த்து சிரித்துவிட்டு உள்வாங்கிக்கொண்டது.


அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !
அன்று நான் கிறுக்கிய அர்த்தமற்ற சொற்பிழைகள்.


எனக்குத்தான் தெரியும் அவள் எத்தனை அழகானவள் என்று, அவள் ஒருத்திகாக எத்தனை தெருக்களில் காத்திருந்தேன், அவள் ஒரு பார்வை பட எத்தனை நாள் தவம் இருந்தேன். அவள் என்னிடம் முதலில் பேசிய போது என் மீது பட்ட அவளின் மூச்சிக்காற்றை இன்னமும் என்னுள் சேமித்து வைத்திருக்கிறேன். அவள் விரல் நுனி முதலில் என் கைகளை தொட்டதினால் அன்று முதல் கை கூப்பி கடவுளை கூட தொழுவதில்லை. இப்படி அவள் அவள் அவள் என்றிருந்த நான் இன்று அவள் இறுதிச்சடங்கிற்க்கு கூட செல்லவில்லை ஏன் தெரியுமா இன்னும் சிறிது நேரத்தில் என் இறுதிச்சடங்கிற்க்கு உலகம் வரும்.


வரும்போது தயவுசெய்து அவளை கேட்டு வாருங்கள், அவள் செல்லும் இடம் சொர்கமா இல்லை நரகமா என்று !

அன்புடன்
அனுஷாதாசன்

அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்

துவட்டப்படாத அவள் கூந்தல் , மேகத்தில் இருக்கும் மழைத்துளி
மையிடப்பட்ட அவள் கண்கள், கார்மேகம் சூழ்ந்த நிலவு
இருந்தும் ஏன் என் பூமியில் மழையில்லை.
அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !

அன்புடன்
அனுஷாதாசன்

என்னை கவர்ந்த சில கிறுக்கல்கள்

என் இதயம் நீ துடிக்கும்போது யாரும் உன்னை கவனிக்க மாட்டார்கள் நின்றுவிட்டால் மட்டும் பலரும் துடிப்பார்கள். இன்று அவளை நீங்கியதால் துடியாய் துடிக்கிறாய் அவளோ கவனிக்காமல் செல்கிறாள். நின்றுவிடேன் வலிக்கிறது!

என் வழிப்பயணமோ முன்னோக்கி , என் நினைவுகளோ பின்னோக்கி அவள் என்னை விட்டு பிரிகையில்! இனிதான் என் வலிப்பயணங்கள்!


சிலந்தி வலை பிண்ணிகொண்டிருக்கிறது ஒட்டடை குச்சியில் , இந்திய அரசியல்!

வெளிச்சம் போட்டு தெடியது மின்னல் , கிடைக்கவில்லை என் நிலவு !

அவளுக்காக நீரூற்றியது இந்த தோட்டக்காரன், வியர்த்திருக்கிறது பூச்செடிகளுக்கு, பூக்கள் பறித்தது அவளை பறித்த அவன்!

அன்புடன்

அனுஷாதாசன்

பெண் சிசுக்கொலை

தாய்:
ஏழரை மாதம் ஆனதே என் கண்ணே காலால் உதைக்க முயன்றாயே, அத்தனையும் நான் சுமப்பேன் ஆணாக பிறந்துவிடு. பெண்ணாக நீ பிறந்தால் கல்லிப்பால் காத்திருக்கு,
சிசு:
ஆணெம்றும் பெணென்றும் நான் அறியேன், அறிந்ததெல்லாம் உன் கருவறை வெளிச்சம்தானம்மா, சொல்லடி என் தாயே ஆண் / பெண் என்றால் என்னவென்று.
தாய்:
சொல்லுகிறேன் என் குழந்தாய், அது நீ வாங்கி வரும் முதல் வரமாகும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, இதில் நீ வாழ உன் உடலில் பதிக்கப்பட்ட அடையாளச் சின்னம்தான் என் உயிரே.
சிசு:
சொல்லம்மா எனக்கு நீ ஆணாகவா பிறந்தாய், ஏனம்மா என்னை கொலை செய்வாய் நான் பெண்ணாக பிறந்துவிட்டால்.
தாய்:
உன்னை வளர்த்து எடுத்து செலவு செய்தாலும் சென்றிடுவாய் நீ புகுந்த வீட்டுக்கு, சீர் செய்தும் நகை செய்தும் உன்னால் எனக்கு யதொரு பயணும் இன்றி வாழ்ந்திடுவேன் என் இறுதி காலத்தில். என் சவத்தை இடுகை இடவும் அனுமதிகாது இவ்வுலகம், பின் பெண்ணாக ஏன் உன்னை பெற்றெடுக்க வேண்டும் சொல்வாயா என் குழந்தாய்.
சிசு:
நான்மட்டும் கருவறையின் இருட்டில் முடங்கி இருப்பதாக எண்ணி இருந்தேன், தாயே நீயோ பாவம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு இருட்டில் வாழ்கிறேன் என்கிறாயே. என்னை பெற்றெடுத்தால் பயன் இல்லை எங்கிறாய், எவ்வளவு பணம் வேண்டுமோ வளர்ந்தவுடன் நான் தருவேன் என்னை உயிரோடு விட்டுவிடு என் தாயே.
தாய்:
பொல்லாத உன் தந்தை அவனிடம் எவ்வாறு சொல்வேனடி, சொல்லாமல் உன் பிறப்பை எவ்வாறு நான் மறைப்பேன். முன்பே தெரிந்திருந்தால் உன்னை கருவிலேயே அழித்திருப்பேன். காலம் கடந்த பின்னே இன்று நான் என்ன செய்வேன்.
சிசு:
தாய் பாசம் அதுகூட எனக்கு வேண்டாம், என்னை அரசு தொட்டிலில் சேர்த்துவிடு. அங்காவது நான் இருந்து என் பிறவிப்பயன் அடைந்துவிடுவேன்.
தாய்:
அரசாங்க தொட்டிலிலே உன்னை தாலாட்ட யார் இருக்கா பெண்ணாக பிறந்ததினால் அங்கும் உன்னை அலட்சியம் செய்திடுவார். வெள்ளைத்துணி உடுத்தியவர் உன்னை பட்டினியில் போட்டிடுவார். பேராசை கொண்ட மிருகங்கள் அது உன்னை தெருவில் கிடத்திடுமே. இந்த இன்னலை தடுத்திடவே, கண்ணே நீ கண்ணுறங்கு.
சிசு:
கண்ணை கொஞ்சம் திறந்து பாரம்மா உலகம் விரிஞ்சி கிடக்கு, என்னை இங்கே வாழவிடு.
தாய்:
வலியால துடிக்கிறேன் என் சிசுவே, நீ ஆணாக பிறந்துவிடு. பெண்ணாக பிறந்துவிட்டால் உனக்கு கல்லிப்பால் காத்திருக்கு.
சிசு:
ஆணாக பிறந்துவிட்டேன் என் தாயே, தாலாட்டாமல் நீயேன் இறந்துபோனாய். கல்லிப்பாலும் எனக்கு இல்லை, உன் தாய் பாலும் எனக்கு இல்லை, அரசாங்க தொட்டில் போல தெருவோரம் கிடக்குறேனே. அம்மாவ முழுங்கிடேன்னு அப்பன் என்னை தொட மறுக்க. அனாதை ஆகிப்போனேன் என்னையும் கொன்னுடுங்க. பெண்ணாக நான் பொறந்திருந்தா தாயே நீயாவது வாழ்ந்திருப்ப. என்ன வரம் வாங்கிவந்தேன், இதுக்கு பெண் ஜென்மம் சாமியில்ல!!

அன்புடன்
அனுஷாதாசன்