அனுஷாதாசன்

அவள் முகம் காண நாளும் தவிப்பேன், காணாவிடிலும் நொடிக்கு ஒருமுறை அவளை மறக்க துடிப்பேன், முடியாமல் போனால் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தி சிறு கவிதை வடிப்பேன் . சிந்திய கவிதைகளை அவளுக்காக இந்த குழுமத்தில் குவித்து வைக்கிறேன். குறிப்பு: நான் பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்தாலும் உனக்காக மட்டும் உன் அருகில் இருக்கிறேன் கொஞ்சம் திரும்பிப்பார் - உன் நிழல் நான்தான். அன்புடன் அனுஷாதாசன்

Monday, April 27, 2009

என்னை ஏமாற்றிய அவள் இறக்க வேண்டியவள்தான்

என்னை ஏமாற்றிய அவள் இறக்க வேண்டியவள்தான், நான் எதற்க்கு அவள் இறுது ஊர்வளத்திற்க்கு வரவேண்டும். நான் பிறந்த ஜாதியை காட்டி என்னை விட்டு பிரிந்து சென்றாள், அவளுக்காக நான் எதற்க்கு கவலை பட வேண்டும், நீ போய் உன் வேலையை பாருடா என்று என் காதலி இறந்த செய்தி சொன்ன என் பள்ளி நண்பனிடம் தொலைபேசியில் சொல்லிவிட்டு என் அருகே இருந்த குவளையில் இருந்த தண்ணீரை பருகினேன், என் இதயத்துடிப்பின் சப்தம் என் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது, கண்களால் எதை பார்த்தாலும் மங்கிய ஒரு காட்சியை காட்டுகிறது.


அந்த காட்சி என்ன என்று கண்களை கசக்கி பார்க்கிறேன், அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி முன் நான் நின்று கொண்டு காரணம் புரியாமல் சிரித்து கொண்டு இருந்த காட்சி. அதுதான் நான் கடைசியாக எனக்காக சிரித்த நாள், அன்றுதான் அவளை முதல்முதலாக பார்த்தேன்.


அந்த காட்சி மறைந்து அடுத்த காட்சி, ஒரு வருடம் முன்பு சென்னை கடற்கரையோரம் தனியாக புலம்பிக்கொண்டு இருந்தேன், என்னை கடல் அலைகள் உள்ளே வா வா என்று அழைத்துக்கொண்டு இருந்தது. உப்புத்தண்ணீரில் நனைவது அவளுக்கு பிடிக்காது, அதனால் உன்னைக்கொண்டு நான் தற்கொலை செய்ய மாட்டேன் என்றேன். அலைகள் என்னை பார்த்து சிரித்துவிட்டு உள்வாங்கிக்கொண்டது.


அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !
அன்று நான் கிறுக்கிய அர்த்தமற்ற சொற்பிழைகள்.


எனக்குத்தான் தெரியும் அவள் எத்தனை அழகானவள் என்று, அவள் ஒருத்திகாக எத்தனை தெருக்களில் காத்திருந்தேன், அவள் ஒரு பார்வை பட எத்தனை நாள் தவம் இருந்தேன். அவள் என்னிடம் முதலில் பேசிய போது என் மீது பட்ட அவளின் மூச்சிக்காற்றை இன்னமும் என்னுள் சேமித்து வைத்திருக்கிறேன். அவள் விரல் நுனி முதலில் என் கைகளை தொட்டதினால் அன்று முதல் கை கூப்பி கடவுளை கூட தொழுவதில்லை. இப்படி அவள் அவள் அவள் என்றிருந்த நான் இன்று அவள் இறுதிச்சடங்கிற்க்கு கூட செல்லவில்லை ஏன் தெரியுமா இன்னும் சிறிது நேரத்தில் என் இறுதிச்சடங்கிற்க்கு உலகம் வரும்.


வரும்போது தயவுசெய்து அவளை கேட்டு வாருங்கள், அவள் செல்லும் இடம் சொர்கமா இல்லை நரகமா என்று !

அன்புடன்
அனுஷாதாசன்

அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்

துவட்டப்படாத அவள் கூந்தல் , மேகத்தில் இருக்கும் மழைத்துளி
மையிடப்பட்ட அவள் கண்கள், கார்மேகம் சூழ்ந்த நிலவு
இருந்தும் ஏன் என் பூமியில் மழையில்லை.
அழுகை மீறிய சோகம், நீ சிரிப்பு மீறிய சந்தோஷம்
மரணத்தை மீறிய சவம், நீ ஆசை மீறிய தவம்
பாதையை மீறிய பயணம், நீ கற்பணை மீறிய புதுமை
சொற்களை மீறிய கவிதை, நீ சிகரம் மீறிய சிந்தனை
வேதம் மீறிய காலம், நீ என் வாழ்வை மீறிய போதும் !

அன்புடன்
அனுஷாதாசன்

என்னை கவர்ந்த சில கிறுக்கல்கள்

என் இதயம் நீ துடிக்கும்போது யாரும் உன்னை கவனிக்க மாட்டார்கள் நின்றுவிட்டால் மட்டும் பலரும் துடிப்பார்கள். இன்று அவளை நீங்கியதால் துடியாய் துடிக்கிறாய் அவளோ கவனிக்காமல் செல்கிறாள். நின்றுவிடேன் வலிக்கிறது!

என் வழிப்பயணமோ முன்னோக்கி , என் நினைவுகளோ பின்னோக்கி அவள் என்னை விட்டு பிரிகையில்! இனிதான் என் வலிப்பயணங்கள்!


சிலந்தி வலை பிண்ணிகொண்டிருக்கிறது ஒட்டடை குச்சியில் , இந்திய அரசியல்!

வெளிச்சம் போட்டு தெடியது மின்னல் , கிடைக்கவில்லை என் நிலவு !

அவளுக்காக நீரூற்றியது இந்த தோட்டக்காரன், வியர்த்திருக்கிறது பூச்செடிகளுக்கு, பூக்கள் பறித்தது அவளை பறித்த அவன்!

அன்புடன்

அனுஷாதாசன்

பெண் சிசுக்கொலை

தாய்:
ஏழரை மாதம் ஆனதே என் கண்ணே காலால் உதைக்க முயன்றாயே, அத்தனையும் நான் சுமப்பேன் ஆணாக பிறந்துவிடு. பெண்ணாக நீ பிறந்தால் கல்லிப்பால் காத்திருக்கு,
சிசு:
ஆணெம்றும் பெணென்றும் நான் அறியேன், அறிந்ததெல்லாம் உன் கருவறை வெளிச்சம்தானம்மா, சொல்லடி என் தாயே ஆண் / பெண் என்றால் என்னவென்று.
தாய்:
சொல்லுகிறேன் என் குழந்தாய், அது நீ வாங்கி வரும் முதல் வரமாகும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, இதில் நீ வாழ உன் உடலில் பதிக்கப்பட்ட அடையாளச் சின்னம்தான் என் உயிரே.
சிசு:
சொல்லம்மா எனக்கு நீ ஆணாகவா பிறந்தாய், ஏனம்மா என்னை கொலை செய்வாய் நான் பெண்ணாக பிறந்துவிட்டால்.
தாய்:
உன்னை வளர்த்து எடுத்து செலவு செய்தாலும் சென்றிடுவாய் நீ புகுந்த வீட்டுக்கு, சீர் செய்தும் நகை செய்தும் உன்னால் எனக்கு யதொரு பயணும் இன்றி வாழ்ந்திடுவேன் என் இறுதி காலத்தில். என் சவத்தை இடுகை இடவும் அனுமதிகாது இவ்வுலகம், பின் பெண்ணாக ஏன் உன்னை பெற்றெடுக்க வேண்டும் சொல்வாயா என் குழந்தாய்.
சிசு:
நான்மட்டும் கருவறையின் இருட்டில் முடங்கி இருப்பதாக எண்ணி இருந்தேன், தாயே நீயோ பாவம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு இருட்டில் வாழ்கிறேன் என்கிறாயே. என்னை பெற்றெடுத்தால் பயன் இல்லை எங்கிறாய், எவ்வளவு பணம் வேண்டுமோ வளர்ந்தவுடன் நான் தருவேன் என்னை உயிரோடு விட்டுவிடு என் தாயே.
தாய்:
பொல்லாத உன் தந்தை அவனிடம் எவ்வாறு சொல்வேனடி, சொல்லாமல் உன் பிறப்பை எவ்வாறு நான் மறைப்பேன். முன்பே தெரிந்திருந்தால் உன்னை கருவிலேயே அழித்திருப்பேன். காலம் கடந்த பின்னே இன்று நான் என்ன செய்வேன்.
சிசு:
தாய் பாசம் அதுகூட எனக்கு வேண்டாம், என்னை அரசு தொட்டிலில் சேர்த்துவிடு. அங்காவது நான் இருந்து என் பிறவிப்பயன் அடைந்துவிடுவேன்.
தாய்:
அரசாங்க தொட்டிலிலே உன்னை தாலாட்ட யார் இருக்கா பெண்ணாக பிறந்ததினால் அங்கும் உன்னை அலட்சியம் செய்திடுவார். வெள்ளைத்துணி உடுத்தியவர் உன்னை பட்டினியில் போட்டிடுவார். பேராசை கொண்ட மிருகங்கள் அது உன்னை தெருவில் கிடத்திடுமே. இந்த இன்னலை தடுத்திடவே, கண்ணே நீ கண்ணுறங்கு.
சிசு:
கண்ணை கொஞ்சம் திறந்து பாரம்மா உலகம் விரிஞ்சி கிடக்கு, என்னை இங்கே வாழவிடு.
தாய்:
வலியால துடிக்கிறேன் என் சிசுவே, நீ ஆணாக பிறந்துவிடு. பெண்ணாக பிறந்துவிட்டால் உனக்கு கல்லிப்பால் காத்திருக்கு.
சிசு:
ஆணாக பிறந்துவிட்டேன் என் தாயே, தாலாட்டாமல் நீயேன் இறந்துபோனாய். கல்லிப்பாலும் எனக்கு இல்லை, உன் தாய் பாலும் எனக்கு இல்லை, அரசாங்க தொட்டில் போல தெருவோரம் கிடக்குறேனே. அம்மாவ முழுங்கிடேன்னு அப்பன் என்னை தொட மறுக்க. அனாதை ஆகிப்போனேன் என்னையும் கொன்னுடுங்க. பெண்ணாக நான் பொறந்திருந்தா தாயே நீயாவது வாழ்ந்திருப்ப. என்ன வரம் வாங்கிவந்தேன், இதுக்கு பெண் ஜென்மம் சாமியில்ல!!

அன்புடன்
அனுஷாதாசன்

Monday, September 1, 2008

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பூக்களின் அழகு, பனித்துழியின் ஈரம்

பாலின் வெண்மை , குழந்தையின் சிரிப்பு

மழலையின் உளறல் , மாலை வெயில்

மஞ்சள் நிலவு , மதுவில் போதை

பெண்ணின் வடிவம் , காதலியின் கோபம்

பெண்மையின் வெட்கம் , குயிலின் குரல்

மயிலின் தோகை, இரவில் தனிமை

காலை நடைப்பபயணம், கோடை மழை

சாரல் நடுக்கம், குளிரில் தேநீர்

தவழும் குழந்தையின் தத்தை நடை தாவும் புள்ளி மான், பயணத்தில் ஓய்வு கட்டிய மனைவி , புதுக்கவிதை

இவை எல்லாம் அழகு என்பார் சிலர் - பாவம் அவர்களுக்கு தெரியாது இத்தனை அழகும் சேர்ந்து நீ இன்று பிறந்திருப்பது -

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்

அனுஷாதாசன்

Tuesday, May 20, 2008

கோவில் விற்பனைக்கு

என் தேவதை வாழ்ந்த என் இதயக்கோவில் விற்பனைக்கு உள்ளது. சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேவதை வாழ்ந்த இந்த‌ கோவில் விற்பனைக்கு வந்துள்ளது, உலகமக்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி வந்தாலும், அன்போடு ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்ட இந்த இதயம் தற்போது தனிமை தாழாமல் தற்போது ஏல‌ம் விடப்படுகிறது.

இத்தனை நாள் ஒரு தேவதைக்காக மூடிவைக்கப்பட்ட இதன் கதவுகள் இன்று முதல் பொது பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. குடியிருந்த என் தேவதை, நான் கண்சிமிட்டிய கணத்தில், சொல்லாமல் சென்றதால், பராமரிப்பு இன்றி சுவர் பூச்சுக்கள் உதிர்ந்து என் ரத்தம் கசிய வலி தாளாமல், இதனை விற்க முடிவு செய்துள்ளேன்.

இதில் நிரந்தரமாக தங்க விருப்பம் உள்ள கல் தேவதைகளும், அன்பு பிசாசுகளும், காதல் காட்டேரிகளும் என் கோவில் இடிந்து விழும் முன்பு விண்ணப்பிக்கவும். கோவிலின் கட்டுமான விவரம் பின் வருமாறு:
அனைவரையும் ஏற்கும் இந்த கோவில், எந்த மதத்தையும் சார்ந்ததில்லை. ஜாதிப்பிரிவினைகள் இல்லாமல் அனைவருக்கும் சம உரிமை எனும் மந்திரம் ஓதப்படும் இதன் கருவறை, கடவுள் மட்டும் கல்லில்லை. அன்புள்ளம் அனைத்தும் இங்கு பூஜிக்கப்படும், வாழும் வரை தீங்கிழைகாத உயிர்களுக்கு அனுமதி உண்டு.

வானத்தை தன் கூரையின் கீழ்கொண்ட இதன் கோபுரங்கள் ஒரே கல்லை குடைந்து, நுட்பமாக அமைக்கப்பட்டது. ஒரே ஒரு வாசல் மட்டுமே கொண்டுள்ள இந்த கோவிலில் மூடநம்பிக்கை கொண்டவர்கள் உள்ளே வருவதற்க்கு இடவசதி இல்லை. தேவதை வாழ்ந்த இடம் என்பதால் இங்கு கருணை கடவுளுக்கென தனி அறை உள்ளது.

சுமார் 5.6" அடி உயரமும் வலுவான தோற்றமும் கொண்ட கோவிலின் வெளிச்சுவர் எத்தனை போர் யானைகளையும் துரத்தியோடச்செய்யும். ஆனால் இந்த கோவிலின் வாசக்கதவுகள் மட்டும் மெல்லிய பூங்காற்றையும், மழலை சிரிப்பையும் கண்டால் வழிவிட்டு சிரிக்கும். இந்த கோவிலின் கொள்கை மதில்களை இதுவரை எவரும் வென்றதில்லை.

வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் செப்டெம்பர் 1984 கட்டிமுடிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த வித மதுக்கரையான், புகைப்பாய்ச்சல் இன்றி வலுவான மனம் கொண்டுள்ளது. பெண்பாசறை இல்லாமல் தேவதைபாசறை மட்டும் கொண்ட இதன் உள்கட்டமைப்பு அழகிய தோற்றம் கொண்டதாயினும், வெளிபார்வைக்கு கருங்கல்லினாலான கட்டிலென தோற்றமளிக்கும்.

சுமார் 17 வருடம் கட்டப்பட்ட இந்த கோவிலில் 8 வருடமாக ஒரு தேவதை மட்டுமே குடியிருந்தது குறிப்பிடதக்கது, தற்போது தனிமைச்சிறையாக இருக்கும் இந்த கோவிலுக்குள் தனியாக குடியிருக்க பயமாக இருப்பதால் இதனை விற்பனை செய்ய முடிவுசெய்தேன்.

விருப்பம் உள்ள தேவதைகள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இன்று, இப்பொழுது, இங்கே. முன்பு தங்கியிருந்த தேவதை கவனிக்க, நீங்கள் செல்லும் போது எனக்கு சொந்தமான நம்பிக்கையையும் தவறி எடுத்து சென்றுவிட்டீர்கள். தயவு செய்து அதனை எனக்கு இந்த முகவரியில் பதிவு செய்யுங்கள், நீங்கள் நலமாக இருப்பதை தெரிவித்தால் போதும் நான் இழந்த்த நம்பிக்கை கிடைத்துவிடும்.

கோவில் தற்போது உள்ள இடம் : chennai
விலை: negotiable
அனுகவேண்டிய முகவரி: anushadhasan@gmail.com

அன்புடன்,
அனுஷாதாசன்.

Friday, February 8, 2008

நான் உனக்காக எழுதும் பரிட்ச்சை!!

அதிகாலையில் தினம் எழுந்து,
கண்மூடி என்னை மறந்து ‍ தொழுது,
உன்னை நினைத்து, தியானித்து,
உன் தெருவோரம் திரிந்து ‍ பயின்று,
திரும்பி வருவேன் என்னை மறந்து பல ஆண்டுகளாக‌।


இன்று உனக்காக நான் எழுதும் பரிட்ச்சை

என் எழுதுகோல்கள் என் இதழ்கள்
நான் எழுதும் தாள்கள் உன் இதழ்கள்

நான் பரிட்ச்சையில் வெற்றி பெற்றேனா ?
சொல் என்னவளே!!

அன்புடன்
அனுஷாதாசன்।

Wednesday, January 16, 2008

ஒரு வரம் தா என்னவளே!!

உன் சந்தோஷத்தில் கை கோத்து திரியும் கைகளாக நான் இல்லாவிடிலும்
உன் கண்ணீர் துடைக்கும் ஒரு விரலாகும் வரம் தா என்னவளே!!


உன் ஆனந்தத்தின் சிலிர்ப்பில் நீ சாய்ந்துகொள்ளும் தோழ்களாக நான் இல்லாவிடிலும்
உன் மௌனத்தை தாங்கும் இரும்பு மதில்களின் வலிமை தா என்னவளே!!


உன் கண்களை கண்டு உன்னை வசியம் செய்யும் கண்களாய் நான் இல்லவிடிலும்
உன் முகம் காணாமல் தினம் உறங்கும் பழக்கம் தா என்னவளே!!


உன் கால்கள் செல்லும் பூப்பாதையாய் நான் இல்லவிடிலும்,
உன் பாதம் காக்கும் செருப்பினாய் மாறும் திறன் தா என்னவளே!!



அன்புடன்
அனுஷாதாசன்.

Friday, November 30, 2007

இறந்துவிடடி நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்

என்ன‌வ‌ளே, என் அனுவே, உன‌க்கு எப்ப‌டிய‌டி சொல்லுவேன்,


இட‌ப்ப‌க்க‌ம் துடிக்கும் இத‌ய‌த்தின் அதிர்ச்சி வ‌ல‌ப்ப‌க்க‌ம் வ‌லிக்குத‌டி,
க‌ண்க‌ளை மூடி உன்னை நினைத்தால், என் த‌லையை பாறையில்
முட்டிய‌தை போலே ஒரு ம‌ங்கிய‌ பார்வையில் என் வ‌லி ம‌ற‌ப்பேன்,
இருந்தும் ஏனோ என் தூக்க‌ம் ம‌ற‌ப்பேன்.


இற‌ப்பு என்றவுட‌ன் அனைவ‌ருக்கும் நினைவுக்கு வ‌ருவ‌து
அந்த அசையா உடல், ஒரு வேளை அந்த உடலுக்கு உணர்ச்சி மட்டும் இருந்தால், அது அந்த உடலை இய‌க்க‌ எப்ப‌டி த‌விக்கும், க‌ற்ப‌னை செய்து பார‌டி, அப்ப‌டித்தான் துடிக்கிறேன் சொல்ல‌ தெரியாம‌ல், என் காத‌லை.


நாம் முழுதும் வெறுக்கும் ஒருவ‌ன் ந‌ம்மை அனைவ‌ர் முன்னிலையில்
அவ‌ம‌தித்து, ம‌கிழ்ந்து, வாய்விட்டு சிரித்து, அத‌னை ந‌ம்மால் ஒன்றும் செய்ய முடியாம‌ல் போனால் , த‌லை சிறிது தாழ்த்தி அவ‌மான‌ம் அதை ம‌றைத்து,
அமைதியாக‌ ப‌ற்க‌ளை ம‌ட்டும் கடித்து, நிலையில்லாத‌ ம‌ன‌ம் கொண்டும் அந்த இடத்தை விட்டு செல்ல முடியாமல் துடிப்போமே,
அது போல்தானடி நீ மாற்றானை மணக்க போவது தெரிந்தும் கோழையாக உயிர்விட முடியாமல் உன் திருமண அழைப்பிதழ் கண்டு நான் துடிப்பது.

சொல்ல தெரியவில்லையடி - நான் எப்படி தமிழில் சொல்லுவேன்


இறந்துவிடடி நானும் உன்னுடன் வந்துவிடுகிறேன்,
மாற்றானோடு செல்லாதடி நான் குமுறி அழுதுவிடுவேன்.

அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்.

எப்ப‌டி இருந்த நான் இப்ப்டி ஆயிட்டேன்.‌

எப்படி இருந்த நான் ,

இப்படி ஆயிட்டேன்,


ச்க்ஜ்ல்;ட்ச்ஜ்ஃபிஒன் க‌ச்ஜ்ட்;ஜ்ஃபொஇ நெஹ்ஜ்ஹ்த்ல்ஹ் க்ஜொட்ஃப்ஜ் ல்க்ச்ஜொட்ஜ்ஃப் ல்க்ஜ்டிஃப்க்ஜ்க்ஜ்ட் க்ஜ்ச்டுஇநிஎஉருஇஉ ம்ன்ல்ச்ன்ஃப்லிச்ஜ்ட்ஃப்ன் ல்ஜ்சிட்ஃப்ஹெக்ஜ் ல்ச்க்ட்ஜ்ஃப்ஜ்ன் ல்க்ச்ஜ்ட்ஃப் ல்சிட்ன்ஃப்ஹ்ந் ல்க்ட்ஜொஃப் ல்ச்க்ஜ்டொஃபுஹ் ல்க்ச்ட்ஃப்பூஎக்ஜ்ச் ல்ச்க்ட்ஜ்ஃபொஜ்ட்ச்ஜ்.


இத‌ன் அர்த்த‌ம் சொல்ல‌ ம‌ட்டுமாவ‌து
உன் மெள‌ன‌ம் விட்டு வ‌ருவாயா!


அன்புட‌ன்
அனுஷாதாச‌ன்.

திருமண விருந்து அருமை!!!

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் மூடனாக இருந்ததில்லை.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் முடமாகி இருந்ததில்லை.

எனக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் குழம்பி இருந்ததில்லை.

எனக்கு எப்படி அழுவதென்று தெரியவில்லை
இப்படி நான் கல்நெஞ்சனாக இருந்ததில்லை.

எனக்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை
இப்ப்டி நான் நாத்தீகனாக இருந்ததில்லை.

எனக்கு எங்கு செல்வதென்று தெரியவில்லை
இப்படி நான் குருடனாக இருந்ததில்லை.

என்னவென்று தெரியவில்லை புலம்புகிறேன்
இனி நீ எனக்கு இல்லை

திருமணவாழ்த்துக்கள், விருந்து அருமை!


அன்புடன்

அனுஷாதாசன்.

Thursday, November 29, 2007

சொல்ல‌டி என் ராட்ச‌ஷி கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்

சொல்ல‌டி என் ராட்ச‌ஷி கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்




என் கடித‌த்திற்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் காத‌லை கொலை செய்தாய்

என் ம‌டைமைக்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் அறிவை கொலை செய்தாய்

என் அன்பிர்க்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் அமைதியை கொலை செய்தாய்

என் அழுகைக்கு ப‌தில் சொல்லாம‌ல் ஏன‌டி என் மனதை கொலை செய்தாய்


சொல்ல‌டி என் ராட்ச‌ஷியே என் உயிரை ம‌ட்டும் விட்டு ம‌ற்ற‌வை கொலை செய்ய‌ எங்கே க‌ற்றுக்கொண்டாய்?




என் உயிரை வாங்கும் என் கொலைகாரியே ஒரு முறை சொல்ல‌டி

என் நித்திரை கெடுத்த‌ ராட்ச‌ஷியே ஒரு முறை சொல்ல‌டி

என‌க்கு பித்த‌ம் கொடுத்த‌ கொடுங்கோல் ஆட்சியே ஒரு முறை சொல்ல‌டி

என்னுள் நித்த‌ம் வ‌ள‌ரும் புற்று நோயே ஒரு முறை சொல‌ல‌டி




சொல‌ல‌டி சொல்ல‌டி என் ராட்ச‌ஷியே என்னை எப்போது முழுதாய் கொலை செய்ய‌ போகிறாய், கொலைகாரியே ஒரு முரைப்பிலாவ‌து என்னை கொலை செய்ய‌டி!!!!


என் ராட்ச‌ஷியே!!!!




அன்புடன்

அனுஷாதாசன்.